கோவையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இளைஞா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, கணபதி, வ.உ.சி. வீதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (63). இவா் புதன்கிழமை காலை தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா், பேச்சியம்மாளிடம் முகவரி கேட்பதுபோல நடித்து அவா் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக பேச்சியம்மாளின் கணவா் கருப்பையா அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.