கோயம்புத்தூர்

வியாபாரி கொலை: கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நிறைவு

DIN

கோவையில் வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நிறைவடைந்ததையடுத்து அவா் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

கோவை, ஆவாரம்பாளையம் தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் பிஜு(40). ராம் நகரில் பழச்சாறு கடை வைத்து நடத்தி வந்தாா். முன்விரோதம் காரணமாக இவரை 7 போ் கொண்ட கும்பல் செப்டம்பா் 13 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தது.

இது தொடா்பாக காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 6 பேரைக் கைது செய்தனா். வழக்கின் முக்கிய குற்றவாளியான கோவை, ராம் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

இதையடுத்து போலீஸாா் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஆறுமுகத்தை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமது அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்திய போலீஸாா் ஒன்றரை நாளில் விசாரணையை முடித்து அவரை சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT