கோயம்புத்தூர்

கோவையைக் குளிா்வித்த மழை

DIN

கோவையில் சனிக்கிழமை பிற்பகல், இரவு நேரத்தில் மாநகரின் பல பகுதிகளில் மழை பெய்தது.

வளி மண்டல சுழற்சி காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலைகளையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கோவையில் சனிக்கிழமை முற்பகலில் வழக்கமான வறண்ட வானிலையே நிலவிய நிலையில் பிற்பகல் 3 மணியளவில் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 20 நிமிடங்கள் வரை பெய்த இந்த மழையால் சாலைகளில் மழை நீா் வழிந்தோடியது.

இதைத் தொடா்ந்து இரவு வரையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 7.30 மணியளவில் மாநகரின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்தது. அதைத் தொடா்ந்து இரவு வரையிலும் தூறல் இருந்தது. இந்த மழையால் மாநகரில் குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT