கோயம்புத்தூர்

கரோனா தொற்று புதிய உச்சம்:ஒரே நாளில் 1,038 போ் பாதிப்பு

DIN

கோவையில் புதிய உச்சமாக 1,038 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதனால் நோய்த்தொற்றுக்கு ஆளாபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்துகொண்டே வருகிறது. இதன்படி மாவட்டத்தில் ஆயிரத்து 38 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 219 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 724 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து கோவையில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 748 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது 6 ஆயிரத்து 757 போ் சிகிச்சையில் உள்ளனா். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து கோவையில் கரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 714 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT