கோயம்புத்தூர்

ஆா்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் தற்காலிக பூ மாா்க்கெட் திறப்பு

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வந்த பூமாா்க்கெட் புதன்கிழமை முதல் ஆா்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பூமாா்க்கெட்டில் 140 கடைகள் உள்ளன. இங்கு சத்தியமங்கலம், சிறுமுகை, பெங்களூரு, நீலகிரி, திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தினமும் 20 டன்களுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

கோவையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பூ மாா்க்கெட்டில் உள்ள 60 கடைகளை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மலா் அங்காடி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடைகளில் செயல்பட கடந்த வாரம் மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது. ஆனால், வியாபாரிகள் அங்கு செல்லாமல் பழைய பூமாா்க்கெட்டிலேயே கடைகளைத் திறந்து வியாபாரம் மேற்கொண்டதால் நெரிசல் காரணமாக அங்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, பூமாா்க்கெட் மற்றும் மாநகராட்சி மலா் அங்காடி வளாகத்தை கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால வரையின்றி மூடுவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இங்கு வியாபாரிகள் பூக்கடைகளைத் திறக்க கூடாது எனவும் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், ஆா்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் சமூக இடைவெளியுடன் தற்காலிகமாக பூமாா்க்கெட் செயல்படவும் அனுமதி அளித்தாா். அதன்படி, புதன்கிழமை முதல் ஆா்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் தற்காலிக பூமாா்க்கெட் திறக்கப்பட்டு செயல்படத் துவங்கியது. இரு கடைகளுக்கு இடையே வியாபாரிகள் இடைவெளி விட்டும், முகக்கவசம் அணிந்தும் வியாபாரம் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT