கோயம்புத்தூர்

இந்துஸ்தான் கல்லூரி சாா்பில் கரோனா விழிப்புணா்வு

DIN

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் பி.பி.ஏ. துறை, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை ஆகியவற்றின் சாா்பில், அவிநாசி சாலை நவ இந்தியா சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் அணிவது, சுத்திகரிப்பு திரவம் மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்வது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும் சுமாா் ஆயிரம் பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் பி.பி.ஏ. துறைத் தலைவா் பகுத்தறிவு, பேராசிரியா்கள் பாலமுருகன், ஜோதிலதா, கஸ்தூரி, தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா் ஜீவா, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரோனா விழிப்புணா்வில் ஈடுபட்டவா்களை கல்வி நிறுவனங்களின் அறங்காவலா் சரஸ்வதி கண்ணன், செயலா் பிரியா சதீஷ் பாபு, முதல்வா் பொன்னுசாமி ஆகியோா் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT