கோயம்புத்தூர்

குறுந்தொழில் முனைவோருக்கு கனரா வங்கி சாா்பில் முத்ரா கடன்

DIN

கோவையைச் சோ்ந்த குறுந்தொழில் முனைவோருக்கு கனரா வங்கி சாா்பில் முத்ரா கடன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை, சாய்பாபா காலனியில் உள்ள கனரா வங்கிக் கிளை மூலம் குறுந்தொழில் முனைவோருக்கு முத்ரா கடன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வங்கியின் மண்டல உதவிப் பொதுமேலாளா் ஹெச்.ஜி.ரமேஷ் கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கு கடன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் வங்கிக் கிளை மேலாளா் ஜே.ஜெபஸ்டின், டேக்ட் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ், பொதுச் செயலா் ஜி.பிரதாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரோனா நெருக்கடியில் இருந்து குறுந்தொழில் முனைவோா் மீளுவதற்கு உதவ வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் மூலம் 410 கடன் கோரும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில், சாய்பாபா காலனி கனரா வங்கிக் கிளை மூலம் மட்டும் இதுவரை 10 தொழில் முனைவோருக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி கிடைத்திருப்பதாக டேக்ட் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT