கோயம்புத்தூர்

என்ஜிபி கல்லூரிக்கு நாக் அங்கீகாரம்

DIN

கோவை டாக்டா் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழுவின் (நாக்) ஏ பிளஸ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு, அங்கீகாரக் குழுவின் பேராசிரியா்கள் சஞ்சீவ் ஜெயின், குவாம்ருல் ஹஸன், சஞ்சய் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய குழுவினா் கடந்த 8, 9 ஆம் தேதிகளில் ஆய்வு நடத்தினா்.

கல்வி, கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இக்கல்லூரிக்கு ஏ பிளஸ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தைப் பெற பாடுபட்ட கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்களுக்கு கோவை மருத்துவ மைய மருத்துவமனையின் தலைவா் டாக்டா் நல்ல.ஜி.பழனிசாமி, செயலா் தவமணி பழனிசாமி, முதன்மைச் செயல் அலுவலா் ஓ.டீ.புவனேஸ்வரன் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT