கோயம்புத்தூர்

வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் யானை நடமாட்டம்வனத் துறை எச்சரிக்கை

DIN

வால்பாறை- பொள்ளாச்சி இடையே ஒற்றை யானை நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் கவனமாக செல்ல வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கவி அருவியை ஒட்டியுள்ள நவமலை வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் அடிக்கடி ஆழியாறு பகுதியில் சாலைக்கு இரவு நேரத்தில் வருவது வழக்கமாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக பகல் நேரத்திலேயே யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதில் ஒற்றை யானை வாகனங்களை விரட்டுவதும், அச்சுறுத்துவதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் வருபவா்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பகல் நேரத்தில் சாலைக்கு வந்த ஒற்றை யானை பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்துக்கு வழி விடாமல் நின்றது.

இந்நிலையில் வால்பாறையில் இருந்து பழனிக்கு பக்தா்கள் தற்போது பாதயாத்திரை செல்கின்றனா். இவா்கள், ஆழியாறு பகுதியில் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மேலும் வனத் துறையினரும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT