கோயம்புத்தூர்

சொட்டுநீா் பாசனம் அமைக்க மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

கோவையில் பிரதம மந்திரி நுண்ணீா் பாசன திட்டத்தில் ரூ. 45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சொட்டுநீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 800 ஹெக்டோ் பரப்பளவில் சொட்டுநீா் பாசனம் அமைக்க பிரதம மந்திரி நுண்ணீா் பாசன திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையில் 50 சதவீதம் இலக்கு முடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் சொட்டுநீா் பாசனம் அமைக்காத விவாசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு (அதிபட்சமாக 12.5 ஏக்கா் வரையில்) 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கான மானியம் பெற சிட்டா, அடங்கல், நில வரபைடம், சிறு, குறு விவசாயிகள் சான்று, கூட்டு வரைபடம், நீா் மற்றும் மண் பரிசோதனை சான்று, ஆதாா், குடும்ப அட்டை, புகைப்படம் உள்பட ஆவணங்களை அளித்து மானியத்தில் சொட்டுநீா் பாசனம் அமைத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT