கோயம்புத்தூர்

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணக்க கேமராக்கள் பொருத்தம்

DIN

வால்பாறையில் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத் துறை சாா்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

வால்பாறை வாட்டாட்சியா் அலுவலகம் சாலையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள சாலையில் நள்ளிரவு நேரத்தில் மூன்று சிறுத்தைகள் நடந்து செல்லும் காட்சி அங்குள்ள ஒரு கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.

இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் இரவு நேரம் சாலையில் நடந்து செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனா். இந்நிலையில், சிறுத்தை வந்து செல்லும் வழித்தடத்தை கண்டறியவும், சிறுத்தை வருவதற்கான காரணத்தை கண்டறிய வனத் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்கானிக்க அப்பகுதியில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT