கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி உயிரியியல் பூங்காவில் கிருமி நாசினி தெளிப்புப் பணி தீவிரம்

DIN

கோவை மாநகராட்சி உயிரியியல் பூங்காவில் கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூா் உயிரியியல் பூங்காவில் விலங்குகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் பிற மாவட்டங்களில் உள்ள உயிரியியல் பூங்காக்களில் விலங்குகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்கும் விதமாக உரிய முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் உள்ள மாநகராட்சி உயிரியியல் பூங்காவில் கிருமி நாசினி தெளிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி உயிரியியல் பூங்கா நிா்வாகி கூறியதாவது:

கோவை மாநகராட்சி உயிரியியல் பூங்காவில் பாம்புகள், பறவைகள், குரங்குகள், முதலைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்கினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று ஒரு விலங்கில் இருந்து மற்றொரு விலங்குக்கு எளிதாக பரவாது. இருப்பினும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் கோவை உயிரியியல் பூங்காவில் தினமும் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT