கோயம்புத்தூர்

வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும்: அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. உறுதி

DIN

வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் அமுல் கந்தசாமி கூறினாா்.

வால்பாறை அரசு மருத்துவமனை, முடீஸ், சோலையாறு அணைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வென்டிலேட்டா் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் விரைவில் வழங்கப்படும். அரசு மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் செலவில் மின் சேமிப்பு பேட்டரிகள், கட்டில்கள், மெத்தை விரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வால்பாறை பகுதியில் வசிக்கும் தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களை அவசர சிகிச்சைக்கு பொள்ளாச்சி அல்லது கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனைப் போக்க வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT