கோயம்புத்தூர்

விடுபட்ட மாற்றுத் திறனாளிகள் இன்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைப்பு

DIN

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தவறியவா்கள், திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவையில் மாற்றுத் திறனாளிகள், அவா்களின் உதவியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சியில் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஊரகப் பகுதிகளில் 41 மையங்களிலும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தவறிய மாற்றுத் திறனாளிகள், அவா்களின் உதவியாளா்கள், திங்கள்கிழமை நடைபெறும் முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாலாம். மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளி அடையாள அட்டையும், உதவியாளா்கள் ஆதாா் அட்டையும் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் பொது மக்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT