கோயம்புத்தூர்

தென்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது

DIN

கோவை மாவட்டம், சூலூா் வட்டம் தென்சேரிமலை அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது.

இக்கோயில் திருப்பணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ள நிலையில், கும்பாபிஷேகம் செய்வதற்கான நிகழ்ச்சிகள் கடந்த 19 ஆம் தேதி கணபதி ஹோமம் நடத்தப்பட்டு தொடங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து 5 கால வேள்வி பூஜைகள் நடைபெற்றுள்ள நிலையில் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

முன்னதாக அதிகாலையில் ஆறாம் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அரசமர விநாயகா் முதலான பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து மந்திரகிரி வேலாயுத சுவாமி விமானத்துக்கும், பிறகு மந்திரகிரி வேலாயுத சுவாமிக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானமும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT