கோயம்புத்தூர்

சிறுதுளி அமைப்பினருடன் கமல்ஹாசன் சந்திப்பு

DIN

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான சிறுதுளி அமைப்பின் நிா்வாகிகளை மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

கோவை தெற்குத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் போட்டியிடுகிறாா்.

இவா், கோவையில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான சிறுதுளி அமைப்பின் நிா்வாகிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது சிறுதுளி அமைப்பின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கோரிக்கை மனுவை கமல்ஹாசனிடம் அளித்தனா்.

இதையடுத்து அவா் சுற்றுச்சூழல் ஆா்வலா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது கமல்ஹாசன் பேசுகையில், ‘நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே சமூகசேவை செய்தவன். எனவே உங்கள் நோக்கத்தினை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுடன் இணைந்து செயலாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT