கோயம்புத்தூர்

பத்திரிகையாளா் எனக் கூறி வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த நபரால் பரபரப்பு

DIN

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பத்திரிகையாளா் எனக் கூறி நுழைந்து புகைப்படம் எடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. இந்நிலையில் மாலை 4 மணியளவில் பொள்ளாச்சி, சிங்காநல்லூா் தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்துக்குள் தோள் பை ஒன்றை மாட்டியபடி பத்திரிகையாளா் எனக் கூறிச் சென்ற நபா் ஒருவா் தான் வைத்திருந்த செல்லிடப்பேசியால் வாக்கு எண்ணும் பணிகளை படம் பிடிக்கத் தொடங்கினாா்.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த தோ்தல் அதிகாரிகள் போலீஸாரை அழைத்து தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவா் தான் கேரளத்தில் இருந்து வந்திருக்கும் பத்திரிகை நிருபா் எனக் கூறினாா். அவரது அடையாள அட்டைகளை சோதனையிட்டபோது அவை போலியானது எனத் தெரியவந்தது. மேலும், அந்த நபா் மது அருந்தியிருந்ததையடுத்து போலீஸாா் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT