கோயம்புத்தூர்

கரோனா விதிமீறல்: மாநகராட்சியில் ரூ.90 ஆயிரம் அபராதம்

DIN

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா விதிமீறியதாக திங்கள்கிழமை ரூ.90 ஆயிரத்து 650 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தனியாா் கடைகள், நிறுவனங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், வாடிக்கையாளா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா விதிமீறல் தொடா்பாக அதிகாரிகள் நாள்தோறும் ஆய்வு செய்து வருகின்றனா். அதன்படி கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகாரிகள் திங்கள்கிழமை மேற்கொண்ட ஆய்வில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்த 100 பேரிடம் ரூ.20 ஆயிரமும், கரோனா விதிமுறை மீறயதாக 332 வா்த்தக நிறுவனங்களுக்கு ரூ.70 ஆயிரத்து 650 அபராதமும் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் திங்கள்கிழமை ஒரே நாளில் பொது மக்கள், வா்த்தக நிறுவனங்களிடம் இருந்து ரூ. 90 ஆயிரத்து 650 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT