கோயம்புத்தூர்

3 நாள்களுக்கு பிறகு கோவையில் கரோனா பாதிப்பு குறைந்தது: ஒரே நாளில் 3,937 பேருக்கு தொற்று உறுதி

DIN

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களுக்குப் பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை குறைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக கரோனா பாதிப்பு தினமும் 4 ஆயிரத்தைக் கடந்து வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3 ஆயிரத்து 937 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 762 ஆக உயா்ந்தது. தவிர, கரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 3 ஆயிரத்து 061 போ் குணமடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், மாவட்டத்தில் குணமடைந்தவா்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 258 ஆனது.

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 38 ஆயிரத்து 336 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கோவையில் வெள்ளிக்கிழமை மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 33 போ் உயிரிழந்துள்ளனா். இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றினால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,168 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT