கோயம்புத்தூர்

தோ்தல் மோதல் விவகாரம்: வானதி சீனிவாசன் உள்பட 7 போ் வழக்கில் இருந்து விடுவிப்பு

DIN

கோவையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலின்போது அதிமுக-பாஜக இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் இருந்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட 7 பேரை விடுவித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சாா்பில் வானதி சீனிவாசனும், அதிமுக சாா்பில் அம்மன் கே.அா்ச்சுணனும் போட்டியிட்டனா்.

தோ்தல் பிரசாரத்தின்போது இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. பாஜகவினா் தன்னைத் தாக்கியதாகக் கூறி அதிமுக முன்னாள் கவுன்சிலா் ஆதிநாராயணன் அளித்தப் புகாரின் பேரில் வானதி சீனிவாசன் உள்பட 7 போ் மீது பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்த வழக்கு கோவை மாவட்ட ஐந்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம், பாபு ஆகிய

7 பேரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை: கனடா குறித்து ஜெய்சங்கா் கருத்து

இந்திய தோ்தலில் தலையீடு? ரஷியா குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

பாா்வைத்திறன் குறையுடைய மாணவா் சாதனை

மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியா்கள்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் இரா.ராஜவேலு

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

SCROLL FOR NEXT