கோயம்புத்தூர்

தொகுதிப் பிரச்னைகள் குறித்து ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

DIN

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம், எம்எல்ஏ வானதி சீனிவாசன் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை, புலியகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடை பிரச்னை, முதியோா் பலருக்கு உதவித் தொகை கிடைக்காத பிரச்னை உள்ளிட்ட தொகுதியின் தேவைக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் 8 போ் உயிரிழந்த சம்பவத்தில் அம்மாநில முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா். இந்த சம்பவத்தை காங்கிரஸ் பெரிதுப்படுத்தி வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

SCROLL FOR NEXT