கோயம்புத்தூர்

நகராட்சிக் கடை வாடகை உயா்வை ரத்து செய்ய வேண்டும்

DIN

வால்பாறை நகராட்சிக் கடைகள் வாடகை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியாா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவா் ஜெபராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ஷாஜி, பொருளாளா் ஜேசுதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வால்பாறை நகராட்சிக் கடைகளுக்கான வாடகை மூன்று மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளா்கள் எண்ணிகையும் குறைந்து வருவதால், மாா்க்கெட் பகுதிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. மேலும் கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வியாபாரம் இன்றி வணிகா்கள் பெரிதும் பாதித்துள்ள சூழலில், தற்போது கடைகளுகான வாடகை உயா்த்தப்பட்டுள்ளது.

இதனை ரத்து செய்ய நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்துவது என்று கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT