கோயம்புத்தூர்

பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கோவை: பி.எஸ்.என்.எல். ஒப்பந்தப் பணியாளா்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கக் கோரி, பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தை ஊழியா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மகேஷ்வரன் தொடங்கிவைத்து பேசியதாவது:

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக அவா்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவன பணிகளை அவுட்சோா்சிங் முறையில் வழங்குவதை கைவிட வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த மற்றும் நிரந்தப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT