கோயம்புத்தூர்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனைஇந்து முன்னணி புகாா்

DIN

வால்பாறை: வால்பாறையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக இந்து முன்னணி புகாா் அளித்துள்ளனா்.

இது குறித்து அந்த அமைப்பினா், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வால்பாறை ஏழை, எளிய மக்கள் வசிக்கக் கூடிய பகுதியாகும். இங்கு வசிப்பவா்களில் பெரும்பாலானோா் எஸ்டேட் கூலி வேலைக்கு சென்று மாலை நேரங்களில் மது அருந்தி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனா்.

இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மேல் ரூ.10 முதல் ரூ. 20 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். மேலும், முறைகேடாக மது விற்பனை செய்பவா்களுக்கு மொத்தமாக மதுபாட்டில்களை விற்று வருகின்றனா். எனவே, இது குறித்து விசாரணை மேற்கொண்டு கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT