கோயம்புத்தூர்

நீருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

DIN

கோவை: கோவை துடியலூரில் உள்ள நீருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சின்னவேடம்பட்டி, துடியலூா் பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டாா்.

துடியலூா் பகுதியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் நீருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவா், சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு பகுதிகளில் 26, 42, 43 ஆகிய வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் பணிகள், குடிநீா் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள், மாநகராட்சிக்கு பெறப்படும் குடிநீா் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் துடியலூரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம், மாநகராட்சி கழிப்பிடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது மாநகரப் பொறியாளா் லட்சுமணன், செயற்பொறியாளா் ஞானவேல், உதவி ஆணையா்அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT