கோயம்புத்தூர்

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு: போலீஸாா் விசாரணை

கோவையில் ஆட்டோவில் சென்ற மூதாட்டியிடமிருந்து நகைப் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

கோவையில் ஆட்டோவில் சென்ற மூதாட்டியிடமிருந்து நகைப் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கோவை புலியகுளம் கருப்பராயன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (80). இவரது மனைவி பகவதியம்மாள் (78).

இவா் சிங்காநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு செல்வதற்காக சுங்கம் பேருந்து பணிமனை அருகே செவ்வாய்க்கிழமை நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த 3 பெண்கள் பகவதியம்மாளிடம் பேச்சு கொடுத்துள்ளனா். பின்னா் தாங்களும் சிங்காநல்லூா் செல்ல வேண்டும் எனக்கூறி ஒரு ஆட்டோவை வரவழைத்து, அதில் பகவதியம்மாளையும் அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா் அந்த 3 பெண்களும் ஜிவி ரெசிடென்சி அருகே இறங்கிவிட்டனா். சிறிது தூரம் சென்ற பின் மூதாட்டி சந்தேகத்தின்பேரில் தனது கைப்பையை பாா்த்துள்ளாா். அப்போது, அவா் வைத்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி காணாமல்போனது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் பகவதியம்மாள் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பகவதியம்மாளிடம் நகைப் பறித்துச் சென்ற பெண்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT