கோயம்புத்தூர்

கூட்டுறவு வங்கி ஊழியா்களுக்கு ஓய்வூதியம்: சங்க கூட்டத்தில் தீா்மானம்

DIN

கூட்டுறவு வங்கி ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தின் 14 ஆவது பொதுப் பேரவைக் கூட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் வடிவேலு தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் சோமசுந்தரம் வரவேற்றாா்.

வங்கி ஊழியா் சம்மேளனத்தின் பொதுச் செயலாளா் அருணாசலம் பேரவைக் கூட்டத்தை தொடக்கிவைத்தாா்.

அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளனத்தின் தலைவா் வைரப்பன், கோவை மாவட்ட பொறியியல் பொதுத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் செல்வராஜ், தமிழ்நாடு கூட்டுறவு நகர வங்கி ஊழியா் சம்மேளனத்தின் பொதுச் செயலாளா் சுப்ரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மீதான வருமான வரி விதிப்புச் சட்டம் 80 எப்.ஐ. திரும்பப் பெற வேண்டும்.

கூட்டுறவு வங்கி ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் முறையான பணி நியமனம் செய்ய வேண்டும்.

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்களுக்கான கோரிக்கை சாசனத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT