கோயம்புத்தூர்

செயலிகளில் மின் கட்டணம் செலுத்த வேண்டுகோள்

DIN

இணையம் மற்றும் செயலிகளைப் பயன்படுத்தி மின் கட்டணம் செலுத்துமாறு மின் வாரியம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் நக்கீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள மக்கள், மின்சாரக் கட்டணத்தை மின்சார வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து செலுத்தி வருகிறாா்கள்.

இதனை சுலபமாக்கும் வகையில் இருக்கும் இடத்திலேயே 24 மணி நேரமும் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு மின் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மின் கட்டணத்தை இணையதளம், கைப்பேசி மற்றும் போன் பே, பே.டி.எம்., ஜி.பே., டான்ஜெட்கோ ஆகிய செயலிகளின் மூலமாகச் செலுத்தி மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT