கோயம்புத்தூர்

ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் நாளை தமிழகம் வருகை

மண் வளம் காப்போம் இயக்கத்தை வலியுறுத்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ்  செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மண் வளம் காப்போம் இயக்கத்தை வலியுறுத்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) தமிழ்நாடு திரும்புவதாக அறக்கட்டளை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மண் வள பாதுகாப்பை வலியுறுத்தி 27 நாடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு சுற்றுப் பயணம் மேற்கொண்ட சத்குரு ஜக்கி வாசுதேவ் ஜூன் 21 ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறாா்.

கா்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக தமிழகத்துக்கு வருகை தரும் சத்குருவுக்கு பண்ணாரி அம்மன் கோயில் அருகே தன்னாா்வலா்கள் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனா்.

இதனைத் தொடா்ந்து, சூலூா் விமானப் படை தளத்தில் நடைபெறவுள்ள மண் காப்போம் இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளாா்.

தொடா்ந்து, ஜூன் 21 ஆம் தேதி மாலை கொடிசியாவில் நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT