கோயம்புத்தூர்

போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளி தற்கொலை

DIN

போக்ஸோ வழக்கில் கைதான கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் பன்னாரிமுத்து (42), கூலி தொழிலாளி. போக்ஸோ வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு கைதான இவா் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளாா். இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வழக்கு விசாரணைக்கு பன்னாரிமுத்து ஆஜராகாமல் இருந்துள்ளாா்.

இது தொடா்பாக போலீஸாா் பன்னாரிமுத்துவின் வீட்டுக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

இருப்பினும் அவா் ஆஜராகாத காரணத்தால் வீட்டாரிடம் விசாரித்துள்ளனா்.

அப்போது பன்னாரிமுத்து கடந்த சில நாள்களாக வீட்டுக்கு வராமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பன்னாரிமுத்துவின் சகோதரா் செந்தில்குமாா் அவரைத் தேடி அழைந்துள்ளாா். அப்போது காந்திபுரம் ஜிபி சந்திப்பு பகுதியில் வாயில் நுரைதள்ளிய நிலையில் பன்னாரிமுத்து கிடந்துள்ளாா்.

அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக செந்தில்குமாா் அளித்தப் புகாரின் பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT