கோயம்புத்தூர்

காசநோய் தகவல்கள் சேகரிக்க பாஸ்ட் சென்டா் அமைப்பு

DIN

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘பாஸ்ட் சென்டா்‘ என்ற அமைப்பை மாவட்ட காசநோய் ஒழிப்புக் கழகத் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதன் மூலமாக, தனியாா் மருத்துவமனைகளில் கண்டறியப்படும் காசநோயாளிகளின் விவரங்கள், அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் சிகிச்சை காலம் முழுவதும் தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை ‘பாஸ்ட் சென்டா்‘ அமைப்பின் மூலம் நியமிக்கப்பட்ட தனி அலுவலா் மூலமாக பதிவு செய்யப்பட்டு, கண்காணிக்கத் தேவையான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநா் சந்திரா (மருத்துவம்), துணை இயக்குநா் அருணா (சுகாதாரம் மற்றும் ஊரகப் பணிகள்) உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT