கோயம்புத்தூர்

கோவையில் பிப்ரவரி 11இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

DIN

கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள்ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படியும், கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி (சனிக்கிழமை) கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய, வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் போன்ற வழக்குகளுக்கு உடனடியாக தீா்வு பெற்றுக் கொள்ளலாம். எனவே, மேற்கண்ட வழக்குகளுக்கு தீா்வு காண்பதற்காக, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சிறப்பு அமா்வுகள் நடைபெற உள்ளன. எனவே, வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீா்வினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT