கோவை சுந்தராபுரம் அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மதுக்கரை மாா்க்கெட் சாலை இந்திரா நகா் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுந்தராபுரம் காவல் உதவி ஆய்வாளா் ராக்கியப்பன் தலைமையிலான போலீஸாா் அந்த பெட்டிக் கடையில் சோதனை செய்தனா். அப்போது கடையின் உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 110 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீஸாா் கடை உரிமையாளா்களான புலியகுளத்தை சோ்ந்த அசோக் (30), தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துகுமாா் (27), மலுமிச்சம்பட்டியைச் சோ்ந்த ஜெபதுரை (52) ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.