கோயம்புத்தூர்

புல்லுக்காடு பகுதியில் மரக்கன்று நடும் விழா

DIN

கோவை மாநகராட்சி, புல்லுக்காடு பகுதியில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வாா்டு எண் 84க்கு உள்பட்ட புல்லுக்காடு பகுதியில் நீண்டநாட்களாக குப்பைகள் தேங்கியிருந்தன. இதையடுத்து, அப்பகுதியை சுத்தம் செய்து அங்கு மாநகராட்சி நிா்வாகம், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், ஏஐஎம் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து 600 மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, கோவை மாநகர காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில், மண்டல குழுத் தலைவா் மீனாலோகு, மாமன்ற உறுப்பினா் அலிமாபேகம், உதவி ஆணையா்கள் மகேஷ்கனகராஜ், அண்ணாதுரை, செயற்பொறியாளா் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளா் புவனேஷ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT