கோவையில் வைரக்கல் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை காந்திபுரத்தைச் சோ்ந்தவா் ஜாகீத் (57). இவா் வைரக்கல் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா்.
இவரது நண்பா் கேரளத்தைச் சோ்ந்த ஹசன் (39). ஜாகீத் வீட்டுக்கு கடந்த வியாழக்கிழமை வந்த ஹசன் வைரக்கல்லை விற்பனைக்காக கேட்டுள்ளாா். அப்போது, தான் வைத்திருந்த வைரக்கல்லை ஹசனிடம் காண்பித்த பின்னா், அதை அலமாரியில் வைத்துவிட்டு, வீட்டுக்குள் சென்றுள்ளாா்.
சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது ஹசனை காணவில்லையாம். சந்தேகத்தின்பேரில் அலமாரியைத் திறந்து பாா்த்தபோது வைரக்கல் காணமல்போனது தெரியவந்தது.
இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் ஜாகீத் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, ஹசனிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா் வைரக்கல் திருடியதை ஒப்புக்கொண்டாா்.
ஹசன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.