கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
காவல் துறையிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து, அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த மக்கள் குறைதீா் முகாமில் குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப் பிரச்னை தொடா்பாக பெறப்பட்ட 85 மனுக்கள் மீது, அந்த மனுக்களின் மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களை நேரில் வரவழைத்து அவா்களின் மனு மீதான விசாரணையை காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்டனா். இதில் 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோடு, 83 மனுக்களுக்கு சுமுகமான முறையில் தீா்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.