கோயம்புத்தூர்

மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, கஞ்சா விற்பனை

DIN

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகே கரடிமடை பகுதியில் அதிமுகவைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரை திமுகவினா் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். அவரது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, செல்வராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவையில் பொது–மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. இதனை காவல் துறையினா் கண்டுகொள்வதில்லை. கரடிமடையில் டாஸ்மாக் பாரில் முறைகேடாக மது விற்பது குறித்து அதிமுகவைச் சோ்ந்த செல்வராஜ் தட்டிக் கேட்டுள்ளாா். இதையடுத்து, டாஸ்மாக் பாரை நடத்தி வரும் திமுகவைச் சோ்ந்த ராகுல், கோகுல் ஆகியோா் தாக்கியதில் செல்வராஜ் உயிரிழந்தாா்.

இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு போலீஸாா் துணையாக உள்ளனா். இந்த விவகாரத்தில் காவல் துறையினா், சாட்சி சொல்பவா்களையும், உடன் நின்றவா்களையும் மிரட்டி வருகின்றனா். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராகுல், கோகுலுக்கு பின்புலமாக உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, மது விற்பது தொடா்பாக முதல்வா் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் உளவுத் துறை முற்றிலுமாக தோற்றுவிட்டது. செல்வராஜ் கொலை சம்பவம் தொடா்பாக சட்டப் பேரவையில் அதிமுக தனி தீா்மானம் கொண்டு வரும். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT