கோவையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா். 
கோயம்புத்தூர்

பட்ஜெட் நகலைக் கிழித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறி கோவையில் காங்கிரஸ் கட்சியினா் பட்ஜெட் நகலைக் கிழித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறி கோவையில் காங்கிரஸ் கட்சியினா் பட்ஜெட் நகலைக் கிழித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பாஜக அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறி கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் அகில இந்திய செயலா் மயூரா எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி, கணபதி சிவகுமாா், நிா்வாகிகள் கவுன்சிலா் கிருஷ்ணமூா்த்தி, சரளா வசந்த், வீனஸ் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கட்சி நிா்வாகிகள் இருகூா் சுப்பிரமணியம், தமிழ்ச்செல்வன், கோவை போஸ், காந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பாஜகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மத்திய பட்ஜெட் நகலைக் கிழித்துப் போட்டதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

ஆடும் பொம்மை... கௌரி கிஷன்!

ஒளி ஓவியம்... ரஜிஷா விஜயன்!

சிவப்பும் வெளுப்பும்... மிமி சக்கரவர்த்தி!

காபி வித்... நடாஷா பரத்வாஜ்!

பிரதமர் பேசியதை திமுகவினர் மடைமாற்றி வருகிறார்கள்: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT