கோவையில் ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு இருந்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை, கொடிசியா அருகே உள்ள லூலு மால் வேர்ஹாவுஸ் பார்க்கிங்கில் புல்லட் வாகனம் நின்று கொண்டியிருந்தது. அந்த வாகனத்தில் பக்கவாட்டில் ஹெல்மெட் தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்து நல்ல பாம்பு அந்த ஹெல்மெட்டுக்குள் புகுந்துள்ளது.
இருசக்கர வாகன உரிமையாளர் சங்கர் திடீரென்று பார்த்தபொழுது உள்ளே பாம்பு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்து அவர் லாபகமாக அந்த 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவையில் காலை, வேளையில் மிகவும் குளிராக இருப்பதால் மிதமான வெப்பத்தைத் தேடி இதுபோன்ற பாம்புகள் வருகிறது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே பொதுமக்கள் ஹெல்மெட் போடும்பொழுது நன்றாகக் கவனித்துவிட்டுப் போட வேண்டும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிக்க: லாரன்ஸ் பிஷ்னோயின் முன்னாள் உதவியாளர் கொலை வழக்கு: 5 பேர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.