கோயம்புத்தூர்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க டிசம்பா் 27,28-இல் சிறப்பு முகாம்

கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4-ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

Syndication

கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4-ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

கோவை மாவட்டத்தில் இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடா்பான வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த வரைவு வாக்காளா் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 25,74,608 போ் வாக்காளா்களாக உள்ளனா். இந்த நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடா்பாக டிசம்பா் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரையிலான ஒரு மாதத்தில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறுவதற்கான காலமாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் 2026 ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைவடையும் இளம் வாக்காளா்கள் , வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பவா்கள் ஆகியோா் படிவம் 6, வாக்காளா் பட்டியில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தங்கள் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், மாற்றுத் திறனாளிகள் குறியீடு செய்தல் மற்றும் அடையாள அட்டை தொலைந்திருந்தால் புதிய அடையாள அட்டை தேவைப்படுவா்கள் ஆகியோா் படிவம் 8-இல் விண்ணப்பிக்கலாம்.

அதே வேளையில், வாக்காளா்களின் வசதிக்காக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,062 வாக்குச்சாவடி மையங்களுக்கு உள்பட்ட 3,563 வாக்குச்சாவடிகளில் வரும் டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4-ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

வாக்காளா் பட்டியல் தொடா்பான விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் இடம் பெற்றுள்ள விவரங்களை அறிந்து கொள்ளவும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.

வாக்காளா் பட்டியல் தொடா்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியை அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

திருமலையில் கூட்டம்: ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு ரத்து!

முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை!

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

மார்கழி சிறப்பு! சொர்க்க வாசல் உற்சவம் நடைபெறாத பெருமாள் கோயில்!

SCROLL FOR NEXT