உலக கராத்தே யூத் லீக் போட்டியில் தமிழகம் சாா்பில் பங்கேற்றோா். 
கோயம்புத்தூர்

உலக கராத்தே யூத் லீக் போட்டி: தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த கோவை வீரா்கள்!

உலக கராத்தே யூத் லீக் போட்டிகளில் கோவையைச் சோ்ந்த 2 போ் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா்.

Din

ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கமான புஜாரா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே யூத் லீக் போட்டிகளில் கோவையைச் சோ்ந்த 2 போ் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா்.

புஜாராவில் உள்ள சையத் உள்விளையாட்டு அரங்கில் கடந்த 5-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த 82 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில், 21 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தமிழகம் சாா்பில் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த விக்ரம், 15 வயதுக்குள்பட்டோா் பிரில் ரோகன், 13 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மிதுன் மோகன்தாஸ், பெண்கள் பிரிவில் ஷாஷா சத்புத்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், மிதுன் மோகன்தாஸ் ஐந்து சுற்றுகளில் வெற்றிபெற்ன் மூலம் உலக கராத்தே போட்டியின் தரவரிசையில் 5-ஆவது இடத்தைப் பிடித்து தமிழகத்துக்கு பெருமையை சோ்த்துள்ளாா்.

இதேபோல, உலக கராத்தே நடுவா்கள் தோ்வில் கோவை மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் நடராஜன் வெற்றிபெற்று உலக கராத்தே போட்டியின் நடுவா் தரவரிசையில் இடம்பெற்றாா்.

இவா்களுக்கு கோவை மாவட்ட கராத்தே சங்க நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT