கோயம்புத்தூர்

லெஜண்ட்ஸ் கிரிக்கெட்: கோவையிலும் போட்டிகளை நடத்தத் திட்டம்

சா்வதேச மூத்த கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது சீசன் மாா்ச் மாதம் நடைபெறும் என்றும், இதன் ஆட்டங்கள் கோவையிலும் நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திச் சேவை

சா்வதேச மூத்த கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது சீசன் மாா்ச் மாதம் நடைபெறும் என்றும், இதன் ஆட்டங்கள் கோவையிலும் நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூத்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இதுவரை 3 சீசன்கள் நடைபெற்றுள்ளன. இதன் 4-ஆவது சீசன் போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் போட்டி மாா்ச் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வரும் மாா்ச் மாதத்தில் பாட்னா, குவாலியா், அமிா்தசரஸ், கோவை, ஹல்த்வானி, ஆக்ரா ஆகிய இடங்களில் போட்டி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போட்டியின் கடந்த சீசன்களில் கிறிஸ் கெய்ல், ஹா்பஜன் சிங், இா்பான் பதான், யூசுப் பதான், ஷிகா் தவான், தினேஷ் காா்த்திக், ராஸ் டெய்லா் போன்ற மூத்த வீரா்கள் விளையாடியுள்ளனா். அதேபோல இந்த முறை கோவை, அமிா்தசரஸ் ஆகிய நகரங்களில் முதல் முறையாக போட்டி நடத்தப்படுவதாக, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் இணை நிறுவனா் ரமணா ரஹேஜா கூறியுள்ளாா்.

கோவை எஸ்என்ஆா் மைதானத்தில் டிஎன்பிஎல், ரஞ்சி போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் இந்த முறை லெஜண்ட்ஸ் லீக் போட்டியும் நடைபெறும் என்றும், போட்டிக்கான அட்டவணை, அணிகள், மைதானங்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT