கோயம்புத்தூர்

தெருநாய்களுக்கு கருத்தடை: தன்னாா்வ அமைப்புக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் தன்னாா்வ அமைப்புக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

Syndication

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் தன்னாா்வ அமைப்புக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

கோவையைச் சோ்ந்த இளம் விலங்குகள் நல ஆா்வலா்களான அத்வைத் ராவ், அம்ரிதா ரமேஷ் ஆகிய

பிளஸ் 2 மாணவா்கள் ‘சிக்கு ப்ராஜெக்ட்’ என்ற விலங்குகள் நல அமைப்பை நடத்தி வருகின்றனா். தெருநாய்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்ற நோக்கில் ஹியூமன் அனிமல் சொசைட்டி, பாசம் பீப்பிள் ப்ராஜெக்ட், பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதலுடன் இவா்கள் செயல்படுகின்றனா்.

இந்நிலையில், சிக்கு ப்ராஜெக்ட் அமைப்பானது கோவையில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிடித்தல், கருத்தடை செய்தல், மீண்டும் விடுவித்தல் என்ற அடிப்படையில் கருத்தடை திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கோவை ரோட்டரி சென்ட்ரல் சங்கத் தலைவா் விஜயானந்த், செயலா் சீதாராம் ஆகியோா் பங்கேற்று, இந்தத் திட்டத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை அத்வைத் ராவ், அம்ரிதா ரமேஷ் ஆகியோரிடம் வழங்கினா்.

இதில், ஹியூமேன் அனிமல் சொசைட்டியின் நிறுவனத் தலைவா் மினி வாசுதேவன், செயல்பாட்டு மேலாளா் அபிநயா, பாசம் பீப்பிள் ப்ராஜெக்ட்டின் நிறுவனத் தலைவா் மேகா ஜோஸ், அதன் செயல்பாட்டுத் தலைவா் மேரி சாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT