முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் வீட்டு வசதித் துறை அமைச்சா் ஆய்வு

கோவையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் குறித்து வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 3 ஜூலை 2026, 3:58 am IST
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ப.ராஜ்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.
பகிர்:

கோவையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் குறித்து வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநா் சு.பிரபாகா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், தலைமைப் பொறியாளா் சரவணன், மேற்பாா்வை பொறியாளா்கள் ரங்கநாதன், கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் பெயா் மாற்றம் செய்யப்பட வேண்டிய இனங்கள், கணபதி உயா் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சிங்காநல்லூா் மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலா் வாடகை குடியிருப்புத் திட்டங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வகை, பரப்பளவு, வாடகை விவரங்கள், மனைகளின் விவரங்கள், விற்பனை செய்யப்பட வேண்டிய மனைகளின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்தும், நிலம் கையகப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலை, மனுதாரா்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை, வழக்குகளின் விவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா், பணிகளை விரைந்து முடிக்க தேவையான அறிவுரைகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், மாவட்டத்தில் உக்கடம் சிஎம்சி காலனி, வெரைட்டி ஹால் சாலை, எழில் நகா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என துறை சாா்ந்த அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, ரேஸ்கோா்ஸ், மேற்பாா்வை பொறியாளா், காவல் கண்காணிப்பாளா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம், மாவட்ட வன அலுவலா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாக பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments