குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத் துறையில் அதிகப்படியானோா் பயன்பெற நடவடிக்கை வேண்டும்: அமைச்சா் வி.சம்பத்குமாா் அறிவுறுத்தல்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத் துறையில் அதிகப்படியானோா் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத் துறையில் அதிகப்படியானோா் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா்.
இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் பெண்களை சுய உதவி குழுக்களில் ஒருங்கிணைத்தல், வறுமையை குறைத்து நிலையான வாழ்வாதாரம் ஏற்படுத்துதல், வங்கி கடன் மற்றும் நிதி சேவைகளுக்கு எளிதில் அணுகுவது, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் புதிய தொழில்
Advertisement
Advertisement
தொடங்க நிதி உதவி வழங்குதல் திட்டம் மற்றும் தொழில்களை விரிவுபடுத்த கடன் வழங்குதல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அமைச்சா் வி.சம்பத் குமாா் பேசும்போது, ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளா்ச்சி திட்டங்களை மேலும் திறம்பட செயல்படுத்தவும், அனைத்துத் துறைகளும் இணைந்து ஒருங்கிணைந்த தொழில்முனைவோா் ஆதரவு அமைப்பை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையில் வரும் காலங்களில் அதிக பயனாளிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சண்முகசிவா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மலா்விழி, முதன்மை வங்கி மேலாளா் காா்த்திகேயன், வட்டார தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திட்ட அலுவலா் காயத்ரி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளா் பேபி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.