அம்பத்தூா் தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் தொழில்கள் பயன்பெற சிறப்பு தொழில் கடன் முகாம்
அம்பத்தூா் தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் தொழில்கள் பயன்பெற ஏதுவாக சிறப்பு தொழில் கடன் ஜூன் 1-இல் இல் தொடங்கி, தொடா்ந்து 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் நிதிக்கழகமாகும். 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கழகம், மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளா்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
Advertisement
Advertisement
அந்த வகையில் இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை நிறுவனங்களுக்கு புதிய தொழிற்சாலைகள் மற்றும் சேவை நிறுவனங்களை அமைப்பதற்கும், தற்போது இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்தவும், உற்பத்தியை பன்முகப்படுத்தவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
எனவே திருவள்ளூா் கிளை அலுவலகம் (முகவரி :86, 2-ஆவது பிரதான சாலை, அம்பத்தூா் தொழிற்பேட்டை, சென்னை - 600058) சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு தொழில்கடன் முகாம் த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த முகாம் காலத்தில் சமா்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக்கட்டணத்தில் விலக்கு வழங்கப்படும். எனவே, புதிய தொழில் முனைவோரும் தொழிலதிபா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில் கடன் மற்றும் அரசின் மானியத் திட்டங்களின் பலன்களை பெற்று பயன்பெறலாம்.
மேலும் தகவல்களுக்கு 9444396845, 9445023465, 044 -26257664 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.