FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பயிர்க் கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு

குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000; சிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி...

முதல்வர் சி. ஜோசப் விஜய்
பகிர்:

கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 25) அறிவித்தார். இதேபோன்று, சிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000 கடன் பெற்றிருந்தால், முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். சிறு விவசாயிகளுக்கு 50% (ரூ. 25,000) தள்ளுபடி செய்யப்படும்.

ரூ. 50,001 - ரூ. 60,000 வரை கடன் பெற்றிருந்தால்,

  • குறு விவசாயிகளுக்கு ரூ. 40,000 தள்ளுபடி

  • சிறு விவசாயிகளுக்கு ரூ. 20.000 தள்ளுபடி.

ரூ. 60,001 - ரூ.70,000 வரை கடன் பெற்றிருந்தால்,

  • குறு விவசாயிகளுக்கு ரூ. 30,000 தள்ளுபடி

  • சிறு விவசாயிகளுக்கு ரூ. 15,000தள்ளுபடி.

ரூ. 70,001-ரூ. 80,000 வரை கடன் பெற்றிருந்தால்,

  • குறு விவசாயிகளுக்கு ரூ. 20,000 தள்ளுபடி

  • சிறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி.

ரூ. 80.001- ரூ. 90,000 வரை கடன் பெற்றிருந்தால்,

  • குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி

  • சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி.

ரூ. 90,001- ரூ. 1,00,000 வரை கடன் பெற்றிருந்தால்,

  • குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி

  • சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி.

ரூ. 1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றிருந்தால்,

  • குறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி

  • சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Crop Loan Waiver Chief Minister Vijay announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments