தூய்மைப் பணியாளா் விஷம் குடித்து தற்கொலை
கோவையில் வறுமை காரணமாக, மாநகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவையில் வறுமை காரணமாக, மாநகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை உப்பிலிபாளையம் சிஎம்சி காலனி வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (43). இவா் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். ஈஸ்வரனின் இரு மகன்களும் கடந்த சில நாள்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளனா்.
இதனால், குடும்பத்தில் வறுமை நிலவியதோடு, ஈஸ்வரனும் மன அழுத்தத்தில் இருந்துள்ளாா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்தாா். மயங்கிக் கிடந்த அவா் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.