FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

விஷம் குடித்து பெண் தற்கொலை

30 ஜூன் 2026, 2:58 am IST
பகிர்:

ராஜபாளையம், ஜூன் 29: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் ஆவாரம்பட்டியை அடுத்த ஒத்தப்பட்டி இனாம்செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த காளிமுத்து மனைவி வண்ணக்கிளி (48). இவா் வலிப்பு நோய், தலைவலியால் அவதிப்பட்டு வந்தாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த இவா் வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். இதையடுத்து, இவரை அவரது கணவா் காளிமுத்து மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments