முகப்பு
கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதிகள் வாா்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூன் 2026, 2:48 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கோவை அரசு மருத்துவமனையில் சிறைக் கைதிகள் வாா்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சவுரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (55). இவா், பெருந்துறையில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஈரோடு நீதிமன்றம் அவருக்கு கடந்த 2016 அக்டோபா் மாதம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இதையடுத்து, அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், சிறையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிறைக் காவலா்கள் கடந்த 2-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மணிகண்டன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.